கரூர் 80 அடி சாலையில் கரூர் மாவட்ட பாஜக சார்பாக நடைபெறும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, உதயநிதிக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப் பார்க்கட்டும். உலகத் தலைவரை மதிக்காத கத்துக் குட்டி தான் உதயநிதி.

உதயநிதிக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி போலீசாரால் தேடப்படும் நபரான அவர் சென்னை ஈசிஆரில் இருக்கின்றார். கரூரில் அவர்களை எதிர்த்தால் கஞ்சா பொட்டலம் வைப்பது மற்றும் மண் அள்ளியதாக வழக்குப்பதிந்து கைது செய்கின்றனர். தமிழகத்தில் தரம் இல்லாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கின்றது.

காலையில 11 மணிக்கு தான் உதயநிதி மேல் வெயிலே படும். நீ சூரியனை காலையில் பார்த்ததே கிடையாது. சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் நீ பார்த்திருப்பாய். தினமும் காலை 3:30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து யோகா செய்துவிட்டு பைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி செய்யும் ஆளிடம் 11.30 மணிக்கு எழுந்திருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால்  சாதாரண நடுத்தர மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று உதயநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.