
மேற்கிந்திய தீவான ஜமைக்காவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ராஜா மணி, சுடலை மணி, சுந்தரபாண்டி ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விக்னேஷின் பெற்றோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் மகனின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். ஜமைக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.