
ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை, வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய முதன்மை செயலர் ஹர்சகாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஒதுக்கும் பொருட்களை எவ்வித தாமதமுமின்றி மக்களுக்கு உரிய நேரத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகிக்கவும், பொருட்கள் இருப்பு விபரங்களை அறியும் வகையில் தினமும் பலகையில் எழுதவும் அறிவுறுத்தினார்.