
தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தெருந்த நிலையில் அதனை தமிழக அரசு ஏற்று தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 1-ம் தேதியும் விடுமுறை தினமாக அறிவித்தது.
இதற்கு அடுத்த தினங்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதைப் போன்ற புதுச்சேரியிலும் தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முதல்வர் ரங்கசாமி தீபாவளிக்கு முந்தைய தினமான அக்டோபர் 30ஆம் தேதியும் அதாவது புதன்கிழமையும் விடுமுறை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாக புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.