கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் நெல்லிக்குழி என்ற பகுதி உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஷ்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் முஸ்கான் என்ற மகள் இருக்கிறார். இவர் முதல் மனைவியின் குழந்தை. அதன் பிறகு அவருடைய இரண்டாவது மனைவி அனீஷா. இந்த சிறுமி கடந்த 19ஆம் தேதி வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். சிறுமி அசையாமல் வீட்டில் படுத்து கிடந்ததாக அவருடைய தந்தை கூறிய நிலையில் பின்னர் தான் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தது தெரிய வந்தது.

பின்னர் இது  தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அனீஷா சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதாவது அந்தப் பகுதியில் நௌஷாத் என்ற ஒரு சூனியக்காரன் இருக்கிறார். இவர்தான் மூடநம்பிக்கையின் காரணமாக சிறுமியை கொலை செய்யுமாறு அனீஷாவிடம் கூறியுள்ளார். அதை நம்பிய அனீஷாவும் சிறுமியை கழுத்தை நெரித்துக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அனீஷாவிடம் நடத்திய விசாரணையில் தன் கணவர் வீட்டில் இல்லாத போது கடந்த 18-ம் தேதி இரவு குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் நௌஷாத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.