நாம் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.  இந்நிலையில் சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “ரசாயனம் கலந்த கலர் பஞ்சு மிட்டாய் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சுற்றுலா மையங்களில் பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய கூறியுள்ளேன். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை அளித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.