
மத்திய பிரதேசத்தை சேர்ந்த புதுமணத் தம்பதி பைரவ் பாபா என்ற பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு தம்பதி தனியாக இருந்ததை கவனித்த மது போதையில் இருந்த ஐந்து பேர் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.
முதலில் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி மரத்தில் கட்டி வைத்துவிட்டு பின்னர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்த கணவரது கண் எதிரிலேயே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இதனை தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்றால் காணொளியை வைரலாக்கி விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து இந்த புதுமண தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்க பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளனர்.