
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொது குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது பாஜக மற்றும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருப்பதாக விஜய் கூறினார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா அண்ணாமலை மோடிக்கு உண்மையாக இல்லை எனவும் திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்வதாகவும் விமர்சித்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2026 சட்டசபை தேர்தல் மிக முக்கியமானது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். கூட்டணிக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால் தற்போது அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. விஜய் முதலில் அரசியல் கள நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். சும்மா மைக்கில் பேசுவது அரசியல் கிடையாது. மேலும் அவர் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும் என்று கூறினார்.