தெலுங்கானாவில் பாரத ராஷ்டிரிய சமாதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ துர்கம் சின்னையா மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே கடந்து செல்லும்போது அவரது காரை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காரை விட்டு கீழே இறங்கிய எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுங்க சாவடி பணியாளர்களை நெருங்கியுள்ளனர். அதன் பின் எம்.எல்.ஏ வை நெருங்கிய பணியாளர் ஒருவரை துர்க்கம் அடிக்க சென்றபோது அவரது ஆதரவாளர்கள் தடுத்து சமரசபடுத்தி அழைத்து  சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் காரில் ஏறாமல் அந்த வழியே நடந்து சென்று சுங்க சாவடியின் இணைப்பாதையில் வந்த சரக்கு வேன் ஒன்றை கையசைத்து முன்னே செல்லும்படி தெரிவித்துள்ளார்.

அந்த வேன் சென்ற பின் தன்னுடைய காரில் ஏறி அவர் சென்றுள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்படாமல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து மண்டமரி வட்ட காவல் ஆய்வாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமூக ஊடகத்தில் இந்த வீடியோவை பார்த்தோம். ஆனால் இது பற்றி எந்த புகார் எங்களுக்கு வரவில்லை. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.