ஜெர்மனியில் சீஸ் தொழிற்சாலை வைத்திருப்பவர் கியாகோமோ சியாப்பரினி. 74 வயதான இவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து சீஸ் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தொழிற்சாலையின் குடோன் பர்காமோ நகரின் அருகே அமைந்துள்ளது. இவரது குடோனில் இருந்து ஒரு நாளைக்கு 50 சீஸ்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். அங்கு 33 அடி உயர  உலோக ரக்குகளில் சீஸ்களை இவர் அடுக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு சீஸ்களை கியாகோமோ ஆய்வு செய்து கொண்டிருந்தபோது ஒரு ரக் கீழே விழுந்து அடுத்தடுத்து சங்கிலித் தொடர்பு போன்று அனைத்து ரக்குகளும் விழுந்தது. இதனால் சீஸ் கட்டிகள் அனைத்தும் உரிமையாளர் கியாகோமோ மீது விழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான சீஸ் கட்டிகள் அவர் மீது விழுந்ததால் வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவரை மீட்கும்  முயற்சியில் ஈடுபட்ட நிலையில் சடலமாக வெளியே எடுக்கப்பட்டார். அவரது உடலை கண்டுபிடித்து வெளியில் எடுக்க சுமார் 12 மணி நேரம் ஆனதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். எப்படி முதல் ரக் சரிந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.