உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற நாய் இடம்பிடித்துள்ளது. பொதுவாக நாய்களின் ஆயுட்காலம் அதிகபட்சம் 15 வருடங்கள் என்றுதான் கூறப்படும். ஆனால் பாபி 30 வருடங்கள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 வருடங்கள் 150 நாட்கள் வாழ்ந்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது பாபி அந்த சாதனையை முறியடித்துள்ளது. பாபிக்கு வயது அதிகமான காரணத்தினால் பார்வை குறைபாடும் நடப்பதில் சிரமமும் இருந்தாலும் அது இன்னும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.