தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் சீமான் அவருக்கு தொடர்ந்து தம்பி என்று கூறி ஆதரவு கொடுத்து வந்தார். ஆனால் விஜயின் முதல் மாநாடு முடிவடைந்த பிறகு அவருடைய கொள்கைகளில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக நடிகர் விஜயின் கொள்கைகள் அழுகிய கூமுட்டை என்றும் லாரியில் அடிபட்டு செத்துவிடுவார் என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதன் பிறகு சமீபத்தில் சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் வாழ்த்து கூறிய நிலையில் அதற்கு சீமான் தம்பி என்று பதிலுக்கு நன்றி தெரிவித்ததார்.

இருப்பினும் மீண்டும் விஜயை அவர் சீரியல் நிலையில் நேற்று அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளார். அதாவது விஜய் அரசியல் வருகை சீமானுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீமான் கட்சியிலிருந்து தற்போது ஏராளமான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக கூறப்படும் நிலையில் தற்போது விஜய்க்கு எதிராக இருக்கும் ரஜினியின் ரசிகர்களை தன் பக்கம் திசை திருப்ப சீமான் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் ரஜினியை நேரில் சென்று சீமான் சந்தித்து பேசி உள்ளார்.

இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் தன்னுடைய x பக்கத்தில் புலியும் கழுகும் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததற்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுபவர்கள் அரசியல் புரிதல் இல்லாத சிறுபிள்ளைகள் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் விஜயை கூட அவர் விமர்சித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது தொடர்பாக சீமான் கூறிய போது அரசியல் மற்றும் திரையுலகம் பற்றி பல்வேறு கருத்துகளை பேசியதாகவும் ஆனால் அது பற்றி தற்போது விரிவாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.