
சென்னையில் நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சீமான் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்றார். அதாவது காலையில் எழுந்தவுடன் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் பேசுகிற மனிதருக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
அவர் என்ன பேசுகிறார் எது பேசுகிறார் என்பது தெரியவில்லை. சர்வாதிகாரியாக இருந்தால்தான் அது நாட்டுக்கு சிறப்பு என்று கூறுகிறார். விட்டால் அவர் ஹிட்லருக்கே சிலை வைப்பார் பார் போல என்று கூறினார். மேலும் சமீபத்தில் ஒரு நேர்மையான ஆட்சியாளர் சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும் என்று சீமான் கூறிய நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் கே. பாலகிருஷ்ணன் இப்படி கூறியுள்ளார்.