நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். விஜயலட்சுமி தன் மீது தொடர்ந்து வழக்குகளை ரத்து செய்யுமாறு சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். மேலும் 12 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து விசாரணைக்கு தடை விதிக்க கோரி சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில்  விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்ன சண்டை நடந்தாலும் சீமான் தான் என் கணவர். சீமான் மாமா நான் பெங்களூரில் ரொம்ப கஷ்டப்படுறேன். உங்ககிட்ட ஆயிரம் சண்டை போட்டாலும் உங்க மேல எவ்ளோ அன்பு வச்சிருக்கேன்னு உங்களுக்கு தெரியும். 14 வருஷமாக நீங்க தான் என்னோட கணவர்னு நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்.

என் கடைசி மூச்சு வரைக்கும் நீங்க தான் என் கணவர். நான் உங்க கள்ளக்காதலி இல்ல. நீங்க யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. பின்னாடி வந்தவங்களுக்கு இவ்வளவு பொசசிவ் இருக்குன்னா 2008இல் இருந்து நீங்கதான் என் உயிர் நினைச்சு வாழ்ந்துட்டு இருக்குற எனக்கு எப்படி இருக்கும். அது ஒன்னும் தப்பு கிடையாது. எனக்கு எதுக்கு இந்த தண்டனை. என்னால உங்களை பிரிஞ்சு வாழ முடியல. தயவு செஞ்சு என்கிட்ட பேசுங்க மாமா. கோர்ட், கேஸ், சண்டை எதுவும் தேவையில்லை. எனக்கு என் கணவர் சீமான் தான் வேண்டும் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.