சீன நாட்டில் தயாரிக்கப்படும் தொலை தொடர்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு கருவிகளை தடை செய்யப்போவதாக அமெரிக்க அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தது. இதற்கு காரணம் அமெரிக்க நாட்டில் தொலைதொடர்பு வலையமைப்பை பாதுகாக்கும் முயற்சியே ஆகும் என கூறப்பட்டது. அதேபோல் சீனாவின் ஹிக்விஷன் நிறுவனம் தயாரித்த பாதுகாப்பு கேமராக்களை இங்கிலாந்து தன்னுடைய அரசு கட்டிடங்களில் பொருத்தி இருந்தது. இதனை தடை செய்யப் போவதாக இங்கிலாந்து அரசு அறிவித்தது.

இந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவின் அரசு அலுவலக கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் தயாரிப்பு கேமராக்கள் முற்றிலுமாக அகற்றப்படும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இன்டர்காம்கள், வீடியோ ரெக்கார்டர், 913 கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை ஆஸ்திரேலியவின் அரசு கட்டிடங்களில் உள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன