கோடை விடுமுறை வந்து விட்டதால் பலரும் சுற்றுலா செல்ல ஆயத்தமாவார்கள். அந்த வகையில் வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா செல்லும் வகையில் இந்திய ரயில்வே நிர்வாகம் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம்.

இந்த சிறப்பு திட்டத்தை மே 24-ஆம் தேதி முதல் ஐஆர்சிடிசி தொடங்குகிறது. இந்த திட்டத்தில் தனியாக பயணம் செய்தால் ரூ.76,200 செலுத்த வேண்டும். அதன் பிறகு 2 பேர் சேர்ந்து பயணித்தால் ரூ.53,800-ம், 3 பேர் சேர்ந்து பயணித்தால் ரூ.51,100-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனையடுத்து குழந்தைகளை உடன் அழைத்து வந்தால் அவர்களுக்கு தனி இருக்கை கொடுக்க ரூ.36,800 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சுற்றுலா திட்டத்தில் 7 இரவுகளும், 8 பகல்களும் அடங்கும். மேலும் தினசரி காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படுவதோடு சுற்றுலா வாகனம் மூலம் அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுவார்கள்.