ரயிலில் பயணித்த ஒரு நபர், பகல் நேரத்தில் ஒரு பெண்ணின் லோயர் பெர்த்தில் தூங்கிக் கொண்டு, ரயில்வேயின் முக்கியமான விதியை மீறியுள்ளார். ரயில்வே விதிகளின்படி, பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை விரித்து தூங்க முடியும்.
மேலும் பகல் நேரத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மிடில் பெர்த் பயணிகள் கீழ் இருக்கையில் மற்ற பயணிகளுடன் அமர்ந்துதான் பயணிக்க வேண்டும். ஆனால், இந்த நபர் பகல் நேரத்தில் பெண்ணின் இருக்கையை ஆக்கிரமித்து தூங்கியதுடன், அந்தப் பெண் அவரை எழுப்ப முயன்றபோது கோபமடைந்து, “என்னைத் தொடாதே” என்று ஆங்கிலத்தில் சத்தமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ट्रेन की पूरी सीट पर अकेला कब्ज़ा… लोग बार-बार बोलते रहे, लेकिन जनाब उठने का नाम ही नहीं ले रहे थे!
आगे जो हुआ, वो देखकर आप क्या करते? pic.twitter.com/Xggo2vV8vX
— Shivam (@shivamworldbit) June 29, 2026
“>
மேலும், அந்தப் பெண்ணை மிடில் பெர்த்தில் போய் தூங்குமாறு கூறி அநாகரிகமாக நடந்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் இருக்கைக்காக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, நிலைமையைக் கட்டுப்படுத்த டிக்கெட் பரிசோதகர் அங்கு வரவழைக்கப்பட்டார்.
அதோடு டிடிஇ வந்தவுடன், அதுவரை திமிராகப் பேசிய அந்த நபர் உடனடியாகத் தனது குரலை மாற்றிக்கொண்டு, “யார் அமர வேண்டுமோ அவர்கள் அமரட்டும்” என்று பணிவாகப் பேசத் தொடங்கினார். ரயில்வே விதிகளின்படி, பகல் நேரத்தில் தூங்க விரும்பும் பயணிகள் தங்களுக்கு அப்பர் பெர்த் இருந்தால் மட்டுமே தூங்க முடியும் என்பதை நினைவூட்டும் வகையிலும், பயணிகளின் பொறுப்பற்ற பொது ஒழுக்கத்தைக் கண்டிக்கும் வகையிலும் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
