வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 7.50 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை 1817 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 1809 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களாக 151 ரூபாய் வரை குறைந்த நிலையில் இந்த மாதம் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரில் விலை மாற்றம் இன்றி 818.50 ரூபாய் ஆக உள்ளது.