இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டு 1898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் வணிக சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.