
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே விறகு அடுப்பிலிருந்து மாறி தற்போது சிலிண்டரை பயன்படுத்தி வருகிறார்கள். பலரும் சமையலுக்கு சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்தும் பொழுது நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
அதன்படி சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலிண்டர் காற்றோட்டமான இடத்தில் வைக்கப்பட வேண்டும். எரியக்கூடிய பொருட்களின் பக்கத்தில் சிலிண்டரை வைக்கக்கூடாது. சிலிண்டர் டியூப் அதிகம் வளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலிண்டர் பயன்பாட்டில் இல்லாதபோது ரெகுலேட்டரை அணைத்து விட வேண்டும்.