
உலகம் முழுவதுமே எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்தபட்டு வருகிறது. பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு முறை குறித்து எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது, புதிதாக இணைப்பு பெறுவது முதல் அதை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது வரை அனைத்தையும் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி எல்பிஜி சிலிண்டர் வாங்கும் பொழுது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிலிண்டர் டெலிவரி செய்யபடும்போது நிறுவனத்தின் முத்திரை மற்றும் சிலிண்டர் சரியாக சீல் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். சீல் உடைந்து சிலிண்டரை பயன்படுத்த வேண்டாம். சிலிண்டர் உள் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தேதியை பார்த்து வாங்க வேண்டும். இதில் A என்பது ஜனவரி முதல் மார்ச் வரை, B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரை, C என்பதை ஜூலை முதல் செப்டம்பர் வரை, D என்பது டிசம்பர் வரை ஆகும். சிலிண்டர் பயன்படுத்தப்படுவதற்கு முன்பாக சோப்பு கரைசலை பயன்படுத்துவதன் மூலம் எரிவாயு கசிவை சரி பார்க்கலாம்.