நடிகர் விஜய் அவர்களை விமர்சித்துக் காணொளி வெளியிடுவதற்காக, நமது சேனலுக்கு திமுக தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்படுவதாகச் சிலர் குற்றம் சாட்டுவதைச் சுட்டிக்காட்டி, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடம்பாவனம் கார்த்தி, சாட்டை துரைமுருகனிடம் கேள்வி எழுப்பிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சாட்டை துரைமுருகன், “எனக்குக் காசுதான் முக்கியம் என்றால், நான் நேரடியாக திமுகவில் இணைந்துவிடலாம். யார் வேண்டாம் என்றாலும் திமுகவில் இணைந்து கொள்ளலாம்” என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், “என்னை ஒரு வருடம் சிறையில் அடைத்து முடக்கியதோடு மட்டுமல்லாமல், நான் வீடு கட்ட வைத்திருந்த பணத்தையும் சிறையில் இருந்து வெளிவரப் பயன்படுத்த வைத்தனர். என் ஒரு வயது மகன் சிறைக்கு அந்தப் பக்கம் நின்று ‘அப்பா’ என்று கைநீட்டி அழைத்த அந்த ஒரு தருணம் முதல், எனக்குத் துயரத்தை ஏற்படுத்திய இந்தக் கட்சியில், இரண்டு லட்சம் அல்ல, 200 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் திமுகவில் இணைய மாட்டேன். திமுக என்கிற கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற வெறி எனது இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். அவரது இந்தப் பதிலுடன் கூடிய காணொளி, சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
View this post on Instagram
