கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் நாகமங்கலா பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரா என்ற 21 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் காதலித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராமச்சந்திரா மலிந்த வெடிகுண்டான ஜெலட்டின் குச்சியை வைத்து தன்னைத்தானே வெடிக்க செய்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமச்சந்திராவின் குடும்பத்தினர் தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். ராமச்சந்திரா ஏற்கனவே அந்த சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடிப் பின்னர் POCSO சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.