அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பேசிய எஸ் பி வேலுமணி தனக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல பிம்பம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார். தாங்கள் இருவருக்கும் இடையே எவ்விதமான பிரச்சனையும் இல்லை எனவும், எஸ்பி வேலுமணி தெரிவித்து இருக்கிறார்.

அதிமுக உலகத்திலேயே ஏழாவது கட்சி இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி. எடப்பாடி அவர்களின் தலைமையில் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு கோடி தொண்டர்களை கொண்ட கட்சி. ஆகவே இதில் எந்த குழப்பமும் இல்லை. யார் யாரெல்லாம் குழப்பம் ஏற்படுத்தினார்களோ அவர்கள் எல்லாம் வெளியே சென்று விட்டார்கள். சிறப்பான முறையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் கட்சி செயல்பட்டு வருகிறது. எப்போதும் எடப்பாடி அவர்களை பொறுத்த வரையில் எந்த முடிவு எடுத்தாலும் எங்களை கலந்து தான் முடிவு எடுப்பார் என தெரிவித்துள்ளார்.