தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை வரிசையாக வந்து சிலர் சந்தித்து  புத்தகம் உள்ளிட்டவைகளை பரிசாக கொடுக்கிறார்கள். அவர்களைப் பார்த்தவுடன் முதல்வர் ஸ்டாலின் முகம் சுளிக்கிறார். ஒருவர் வணக்கம் சொல்லியபடியே சிரித்த முகத்துடன் முதல்வருடன் கைகுலுக்க வந்தார். ஆனால் முதல்வர் கையை தூக்கியதுடன் முகம் சுளித்தார்.

இதே போன்று ஒருவர் புத்தகத்தை வழங்கிய போதிலும் அவர் முகம் சுளித்தபடியே அதனை வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது சவுக்கு சங்கர் அதனை தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் படாது படாது என்கிற வாசகத்தையும் எழுதியுள்ளார். இதற்கு தற்போது பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.