சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளும் சூழல் உள்ளது. அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். புதுப்புது யோசனைகள் மனதில் தோன்றும். இன்று குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

எதிர்பாராத முன்னேற்றங்களால் வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் வெற்றிகரமாக முடியும். கடுமையான முயற்சிக்குப் பிறகு காரிய வெற்றி ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்காக நடை பயிற்சி முக்கியம். பெண்கள் எந்த குழப்பத்திற்கும் ஆளாக வேண்டாம். நடக்க வேண்டியது நல்லபடியாக நடக்கும். அவசரப்பட வேண்டாம்.

சூழ்நிலை புரிந்துகொண்டு முடிவெடுங்கள். இன்று மாணவர்கள் எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். கண்டிப்பாக கல்வியில் வெற்றி பெறுவீர்கள். புதுப்புது யோசனைகள் தோன்றும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்