
சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பிப்ரவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேப்போன்று 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் பொது தேர்வுகள் காலை 10:30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணி நடைபெறும்.