
கடலூர் மாவட்டம் தலங்குடி அருகே திருநங்கை சுரேஷ் (எ) சுபஸ்ரீ (23) தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டூரைச் சேர்ந்த சுபஸ்ரீ, பாலூரைச் சேர்ந்த மற்றொரு திருநங்கை ஒருவரை காதலித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் காதலை ஏற்று கொள்ளாததால் சுபஸ்ரீ, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சுபஸ்ரீ தற்கொலை செய்த சம்பவம், அவரது குடும்பத்தினருக்கும் திருநங்கை சமூகத்தினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடலூர் புதுநகர் காவல் நிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சுபஸ்ரீ தற்கொலைக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து வருகின்றனர்.