இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பட்டியலில் முதலிடத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ராஷ்மிகாவின் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழில் வாரிசு மற்றும் சுல்தான் ஆகிய படங்களில் நடித்துவரும் நிலையில் ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆவதால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்போது வாடகை கொடுக்க கூட பணமில்லாமல் என் பெற்றோர் கஷ்டப்படுவார்கள். இதனால் நாங்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை வீட்டை மாற்றும் சூழல் ஏற்பட்டது. என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக என் பெற்றோரிடம் நான் எதையுமே கேட்க மாட்டேன். ஒரு பொம்மை கூட வாங்கித் தருமாறு கேட்டு அவர்களை வற்புறுத்தியது கிடையாது. என்னுடைய குழந்தை பருவ நினைவுகள் என் வெற்றியை  சாதாரணமாக எடுத்துக் கொள்ள விடவில்லை. ஏனெனில் அது எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.