ஓரளவுக்கு தான் தாங்கிக்க முடியும் அண்ணாமலை ஒரு சின்ன பையன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு குருவரெட்டியூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவுடன் மீண்டும் கூட்டணிக்கு போக முடியாது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் கூட்டணியில் இருக்க வேண்டுமாம். அதேபோல் 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஒரு பூத்தில் ஐந்து முதல் பத்து பேர் வைத்திருக்கும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என இரண்டரை கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சியிடம் டிமாண்ட் செய்கிறார்கள் என்று கருப்பணன் விமர்சித்துள்ளார்.