பல வெற்றிப் படங்களில் நடித்தும், சினிமாவில் புகழ் பெற்ற பல நடிகர்கள், காலப்போக்கில் விலகிச் செல்லும் சம்பவங்களை பாலிவுட் சந்தித்து வந்துள்ளது.
அதேபோல், மேரே யார் கி ஷாதி ஹை என்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை துலிப் ஜோஷி, சல்மான் கானுடன் ‘ஜெய் ஹோ’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ‘தில் மாங்கே மோர்’, ‘தோகா’, ‘மாத்ருபூமி’ போன்ற படங்களில் நடித்ததுடன், பஞ்சாபி மற்றும் தென்னிந்திய படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பல்வேறு மொழிகளில் பணியாற்றியவர். ஏர்லைன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
View this post on Instagram
“>
இந்நிலையில், சினிமாவில் இருந்து படிப்படியாக விலகிய துலிப் ஜோஷி, தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக மாற்றிக் கொண்டார். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு, வேத ஜோதிடம் மற்றும் தியானம், சுய விழிப்புணர்வு தொடர்பான பாடங்களை கற்றுக்கொண்டு, தற்போது ஜோதிடராகவும் ஆன்மீக ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
பலருக்கு ஜோதிட ஆலோசனைகள், ஆன்மீக பட்டறைகள் நடத்தி வருவதாக கூறப்படும் துலிப் ஜோஷி, இப்போது முற்றிலும் சினிமா வட்டாரத்திலிருந்து விலகி, தனது புதிய பாதையில் பயணித்து வருகிறார். அவரது இந்த எதிர்பாராத மாற்றம், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
