தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்து வரும் நிலையில் இவர் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான செய்திக்கு நடிகை காஜல் அகர்வால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து காஜல், சினிமாவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன். ரசிகர்கள் மீது தனக்கு அதிக அன்பு உள்ளது. அதை இறுதியில் விட்டு விட மாட்டேன். தன் தொழிலும் குடும்ப வாழ்க்கையையும் தனித்தனியாகவே இருக்கிறது, அது தொடரும் என்று அவர் தெரிவித்தார்.