ஒரு இளைஞர் சிகரெட் புகைக்க ஒரு ஆபத்தான முறையை முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர், தனது ஜீன்ஸ் பேண்டில் எரியக்கூடிய திரவம் ஊற்றி  தீ வைத்தார். அதன் பிறகு, அந்த தீயை வைத்து தனது சிகரெட்டை கொளுத்தினார். இது அந்த இடத்தில் இருந்தவர்கள் சிலரை ஆச்சரியப்படச் செய்தது.

ஆனால் சிகரெட் கொளுத்திய பிறகு, ஜீன்ஸில் ஏற்பட்ட தீயை அணைக்க அவர் மிகுந்த முயற்சி செய்தாலும், அது அணையவில்லை. அருகில் இருந்த நண்பரும் உதவ முயன்றார். ஆனால் வீடியோ முடியும் வரை தீ அணையவில்லை. இந்த வீடியோவில், பிறகு என்ன நடந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த செயல் இளைஞரின்  உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கலாம் என வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தோர் மீது பலரும் கடும் விமர்சனங்கள் செய்துள்ளனர். “ஸ்டைல் காட்ட ஆசைப்பட்டதால் இவன் ஏமாந்தான்” என ஒருவர் குறிப்பிட்டிருக்க, “தீயுடன் விளையாடவே கூடாது என்ற பெரியவர்களின் வார்த்தையை இளைஞர்கள் கவனிக்க வேண்டும்” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர்கள் இந்த மாதிரியான ஆபத்தான முயற்சிகளை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தேவைப்படுகிறது.