பெரும்பாலான சாலைகளில் இரண்டு புறங்களிலும் வரிசையாக மரங்கள் நடப்பட்டு இருக்கும். அவ்வாறு இருக்கும் மரங்களில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது சாலையோரம் மரங்களில் வெள்ளை நிறம் அடிப்பதற்கு பாதுகாப்பு நோக்கமே முக்கியமாக பார்க்கப்படுகின்றது.. மரங்களுக்கு வெள்ளை அடிக்க சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது.

சுண்ணாம்பு பூசப்படும் போது அது மரத்தின் பட்டை வெடிக்காமல் பாதுகாப்பாக இருக்க துணை புரியும்.. மரத்தை வலுவடையவும் செய்கிறது. இவ்வாறு மரங்களின் வேர் வரை சுண்ணாம்பு அடிப்பதால் பூச்சி தாக்குதல் மற்றும் கரையான் கூடு கட்டுதல் ஆகியவற்றில் இருந்து மரங்களை பாதுகாக்க முடியும். இதனால் மரங்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும். மரங்களில் வெள்ளை நிறம் அடிக்கப்படுவதால் சூரியனின் நேரடி கதிர்களால் சேதம் அடையும் வாய்ப்பும் குறைவுதான். சாலையோரம் மரங்களுக்கு வெள்ளை நிறம் பூசுவதில் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும்.

தெருவிளக்கு இல்லாத சாலைகளில் கூட மரங்களில் உள்ள வெள்ளை நிறம் மக்கள் மற்றும் வாகனங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். அதே சமயம் சாலையோரம் மரங்களில் வெள்ளை நிறம் அடிப்பதால் அது வனத்துறையின் பாதுகாப்பில் உள்ள மரம் என்பதை தெரியப்படுத்துவதற்கும் பொதுமக்கள் அந்த மரங்களை வெட்டக்கூடாது என்பதை உணர்த்துவதற்கும் இந்த முறை கையாளப்படுகின்றது.