
சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் ஒரு 18 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் சம்பவ நாளில் வீட்டிலிருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உடனே மாணவி பயத்தில் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அவரை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபரின் பெயர் சுனில் ஜாமத் (24) என்பது தெரியவந்தது. அவர் கட்டிட வேலை செய்து வருகிறார். மேலும் இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.