ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர்  பகுதியில் சாலையில் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அவர் பால்காரர். அவர் பைக் ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று அவரின் வண்டி மீது மோதியது. இதில் அவர் நிலைத்தடுமாறு கீழே விழுந்த நிலையில் பால் அனைத்தும் சாலையில் கொட்டியது.

இந்த விபத்தில் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த இருவர் காயமடைந்த பால்காரரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.