
பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் யானை தாக்கி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாய் தான் நிவாரணம் கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கிய தமிழக அரசு, தற்போது யானை தாக்கி இறந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாய் தான் நிவாரண உதவி வழங்கியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் அரசு இதுபோன்ற மரணங்களுக்கு வெறும் 2,00,000 ரூபாய் மட்டும் தான் நிவாரணம் வழங்குகிறது. மேலும் இந்த அரசாங்கத்திடம் நிதி உதவி பெறுவதற்கு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.