
வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைவதற்கு முன்பாகவே தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு 37 வயது ஆகும் நிலையில் நேற்று ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இவர் 19 வருடங்களாக வங்கதேச அணியில் விளையாடி வரும் நிலையில் 2006 ஆம் ஆண்டு ஜிம்பாவேவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமானார்.
இவர் 274 ஒரு நாள் போட்டிகளில் 7795 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இதில் 9 சதங்கள் மற்றும் 49 அரை சதங்கள் அடங்கும். நடப்புச் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவிடம் வங்கதேச அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.