
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் நிலையில் இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முதுகு தண்டவடத்தில் காயம் காரணமாக பும்ரா மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு இன்னும் காயம் முழுமையாக குணமாவததால் தற்போது பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்து விட்டது.
அவருக்கு பதிலாக ஹர்ஷித்ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று மற்றொரு இளம் வீரரான ஜெய்ஸ்வாலும் சாம்பியன் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்சித்ராணா, முகமது ஷமி, ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.