சாம்சங் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்காக அப்கிரேட் டு அவேசம் லயால்டி என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது பலதரப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ஃபோன்களை மலிவு விலையில் வாங்க அனுமதிக்க கூடிய ஒரு திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் கேலக்ஸி ஏ 14 5ஜி ஸ்மார்ட் ஃபோனின் 4 ஜிபி ரேம் +64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை 14,499 ரூபாய்க்கு வாங்கலாம். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை 18,449 ரூபாய் ஆகும். மேலும் இந்த மாடலுக்கான இஎம்ஐ விருப்பங்கள் 973 ரூபாய் முதல் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது