
நேற்று அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பூரண குணமடைய தி.மலையில் உள்ள மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதியில் நடிகர் தாடி பாலாஜி வழிபாடு செய்துள்ளார். இதுபற்றி அவர், செந்தில் பாலாஜி தனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர் என்றும், அவருக்கு இது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.