தமிழகம் முழுவதும் அரசின் சார்பாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் குழு மூலமாக இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு அவர்கள் மாணவர்களுக்கு சமைத்து வழங்குவார்கள். தற்போது இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியில் பட்டியலின பெண் சமையல் செய்வதால் மாணவர்கள் சாப்பிட வராதது எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி அரசுபள்ளியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முனிய செல்வி என்ற பெண் காலை உணவு திட்டத்திற்காக சமையல் செய்கிறார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் மாணவர்களை சாப்பிட அனுமதிப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். 2 பேர் மட்டுமே சாப்பிடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்