பீகார் மாநிலம் முசாபூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியர் தனது அலுவலக அறையைச் ‘சுத்திகரிப்பு’ செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, கல்வித்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது முரௌல் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு சிவநந்தன் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஞான பிரகாஷ். இவர் தனது அலுவலக அறையை சாதி பாகுபாடு காரணமாக வினோதமான முறையில் பூஜை செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி இந்த வீடியோ கிளிப் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ கவனத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் சம்பந்தப்பட்ட பொறுப்புத் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து விளக்கம் கேட்டு எழுத்துப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
बिहार के मुजफ्फरपुर में स्कूल के प्रधानाध्यापक के ऑफिस में कथित शुद्धिकरण का वीडियो वायरल हुआ. अब इस मामले में शिक्षा विभाग ने बड़ा एक्शन लिया है. मुरौल प्रखंड के राजकीयकृत शिवनंदन उच्च माध्यमिक विद्यालय के प्रभारी प्रधानाध्यापक को तत्काल प्रभाव से निलंबित कर दिया गया है. इसी के… pic.twitter.com/XMkV8B5XTp
— AajTak (@aajtak) September 6, 2026
முதல் கட்ட விசாரணையில், தலைமை ஆசிரியரின் இந்தச் செயல் ஒரு அரசு ஊழியருக்கான நிர்ணயிக்கப்பட்ட நன்னடத்தை விதிகளுக்கும், கடமைக்கும் விரோதமான கடுமையான மீறல் என்று கல்வித்துறை கருதியது. மாவட்ட கல்வி அதிகாரி குமார் அரவிந்த் சின்ஹா வெளியிட்ட உத்தரவின்படி, இந்தச் செயல் கோரமான ஒழுங்கீனம் மற்றும் கடமைகளுக்கு எதிரான அலட்சியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பள்ளியின் கல்விச் சூழலிலும் மிகவும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, பொறுப்புத் தலைமை ஆசிரியர் ஞான பிரகாஷை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளைக் கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியாது என்று நிர்வாகம் தரப்பில் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
