தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சளி, இருமல், உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், தாமதிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை பெற வேண்டும். அவ்வாறான சூழலில், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் போன்றவற்றிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.