விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தேமுதிகவில் இருந்து ஒவ்வொருவராக மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிகவில் இருந்து விலகிய R. பாக்கியராஜ் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். தேமுதிகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊத்தங்கரை தொகுதி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.