அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் சரண்டராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ED 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்த அசோக்குமார், தனக்கு இதய பாதிப்பு இருப்பதால் 4 வாரம் அவகாசம் கேட்டிருந்தார். இந்த அவகாச கெடு ஓரிரு நாளில் நிறைவடையும் நிலையில், எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின் சரண்டர் ஆவார் என கூறியுள்ளார்