சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் MLA மாணிக்கம் மீண்டும் தன்னை தாய்க் கழகத்தில் இணைத்துக் கொண்டார். சமீப காலமாக அவர் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அக்கட்சியில் அவருக்கு கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பொது செயலாளர் EPSஐ சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். இவர் ஏற்கனவே அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட துணை செயலராக இருந்துள்ளார்.