
ஆறு மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காணொளியை நாசா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த காணொளியில் பூமியில் இருக்கும் அனைவருக்கும் விண்வெளி வீரர்களான எங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறியதோடு எங்களது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகுகிறோம். நாங்கள் ஏழு பேர் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ்ஸை கொண்டாட இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
https://x.com/NASA/status/1871298123777101835