ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் மேத்யூ வேட்.‌ இவர் விக்கெட் கீப்பர். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1613 ரன்கள் குவித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 97 ஒரு நாள் தொடர், 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆஸ்திரேலியா அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்த நிலையில் தற்போது இவருடைய ஓய்வு ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.