ஆகஸ்ட் 25 முதல் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு திமுக அரசு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலன்செட்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியிலும் காலை உணவு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்த திட்டத்தில் பங்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது குறித்து விசாரிக்க அதிகாரி ஒருவர் பள்ளிக்கு சென்றபோது சமையல் செய்வது தலித் பெண் சுமதி என்பதால் காலை உணவை 15 மாணவர்கள் தவிர்த்தது தெரிய வந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பள்ளிக்கு நேரடி ஆய்வுக்கு சென்றதோடு அங்கு வழங்கிய காலை உணவை சாப்பிட்டுள்ளார். பின்னர் தொடர்ந்து இதுபோன்று வேறுபாடு பார்த்து வந்தால் எஸ்சி எஸ்டி தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.